உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்
கள்ளத்தி னாரும் கலந்தறி வார்இல்லை
வெள்ளத்தை நாடி விடும்அவர் தீவினைப்
பள்ளத்தில் இட்டதோர் பந்தருள்ளானே. – (திருமந்திரம் – 511)
விளக்கம்:
தீவினைகள் நிரம்பிய பள்ளம் போன்றது நமது உடல். இந்த உடலின் உள்ளே நம் சிவபெருமான் பந்தல் அமைத்து தெளிந்த தீர்த்தமாக இருக்கிறான். கள்ள மனம் கொண்டவரால் அதை உணர முடியாது, அந்த சிவனுடன் மனம் கலக்க முடியாது. அன்புள்ளம் கொண்டவர்கள் தம்முள்ளே உள்ள தெளிந்த தீர்த்தமான சிவபெருமானை உணர்ந்து அவனோடு கலந்து இருப்பார்கள். அன்பில்லாத மற்றவர்கள் புறவுலகில் உள்ள தீர்த்தங்களில் கடவுளைத் தேடி அலைவார்கள்.