உள்ளுயிர்ப் பாயுட லாகிநின் றான்நந்தி
வெள்ளுயி ராகும் வெளியான் இலங்கொளி
உள்ளுயிர்க் கும்உணர் வேயுட லுட்பரந்
தள்ளுயி ராவண்ணந் தாங்கிநின் றானே. – (திருமந்திரம் – 418)
விளக்கம்:
தூய உயிராகிய நந்தியம் பெருமான் பரந்த பெருவெளி எங்கும் இலங்கும் ஒளியாக விளங்குகிறான். அவன் நமது உடலாகவும், உள்ளே விளங்கும் உயிராகவும் இருக்கிறான். உயிராக இருப்பது மட்டுமல்லாமல், நமது உணர்வாகவும் இருந்து, நமது உயிர் உடலை விட்டு நீங்காமல் காக்கவும் செய்கிறான் நந்தியம் பெருமான்.