அப்பரி சேயய நார்ப்பதி வேள்வியுள்
அப்பரி சேயங்கி அதிசய மாகிலும்
அப்பரி சேயது நீர்மையை யுள்கலந்
தப்பரி சேசிவன் ஆலிக்கின் றானே. – (திருமந்திரம் – 355)
விளக்கம்:
தக்கனின் தலைமையில் நடந்த வேள்வியில் முக்கிய பங்கு கொண்டவன் அக்கினித் தேவன். அவன் வேறு வழியில்லாமல் தான் அந்த வேள்விக்குத் துணையாக நின்றான் என்பதைப் புரிந்து கொண்ட சிவபெருமான் அவனிடம் மட்டும் தன் கோபத்தைக் காட்டவில்லை. அக்கினித் தேவனின் ஆற்றலை அவன் தணிக்கவில்லை.