சந்தி செயக்கண் டெழுகின்ற அரிதானும்
எந்தை யிவனல்ல யாமே உலகினிற்
பந்தஞ்செய் பாதத்து வீழ்ந்து தவஞ்செய்ய
அந்தமி லானும் அருள்புரிந் தானே. – (திருமந்திரம் – 354)
விளக்கம்:
வீரபத்திரர் தக்கனின் வேள்வியை அழிப்பதைப் பார்த்த திருமால் “நாங்கள் சிவநிந்தனை செய்பவர்கள் அல்ல!” என்று சொல்லி இந்த மண்ணுலகம் வாழக் காரணமான சிவபெருமான் பாதத்தில் விழுந்து வணங்கினான். அந்தம் இல்லாத சிவபெருமானும் சினம் தணிந்து திருமாலுக்கு அருள் புரிந்தான்.